ராகுல் காந்தியின் நடைப்பயணம் – தேஜஸ்வி யாதவ் பங்கேற்பு

ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மெற்கொண்டு வருகிறார். தற்போது பீகார் மாநிலத்தில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில தினங்களாக அவர் நடை பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்றுடன் பீகார் மாநிலத்தில் அவருடைய நடை பயணம் முடிவடைகிறது. இன்று மாலை உத்தர பிரதேச மாநிலத்திற்கு அவரது நடைபயணம் சென்றடைகிறது.

இன்று காலை பீகார் மாநிலம் சசாரமில் ராகுல் காந்தியை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், அம்மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் அவரை வரவேற்றார். பின்னர் ராகுல் காந்தியை ஜீப்பில் (Wrangler) அமர வைத்து தேஜஸ்வி யாதவ் ஜீப்பை ஓட்டினார்.

ராகுல்காந்தி கைமுரில் இன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்கிறார். நிதிஷ் குமார் இந்தியா கூட்டணி உடனான தொடர்பை முறித்துக் கொண்ட பிறகு தேஜஸ்வி யாதவ் ராகுல் காந்தியுடன் மேடையில் தோன்றும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். ரோஹ்தாஸ் என்ற இடத்தில் ராகுல் காந்தி விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news