ராகுல் காந்தி ஒரு காகிதப் புலி – தெலுங்கானா முதலமைச்சர் மகள் தாக்கு

மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தெலுங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ஒரு காகிதப் புலி என தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கவிதா கூறுகையில், ராகுல் காந்தி காட்டு சிங்கம் அல்ல; அவர் ஒரு காகிதப் புலி. ஏனென்றால், யார், எதை எழுதி கொடுத்தாலும், அதைத்தான் படித்துவிட்டுப் போவார். உள்ளூர் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள மாட்டார். இந்தப் பிராந்தியத்தின் உள்ளூர் மரபுகள் அல்லது கலாசாரத்தை அவர் மதிக்கவில்லை அல்லது புரிந்து கொள்ளவில்லை என தெரிவித்தார்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools
Tags: tamil news