ராகுல் டிராவிட்டால் தான் இது நடந்தது – இன்சமாம் உல் ஹக் புகழாரம்

பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார். இவர் முன்னதாக 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியும் தலைமை பயிற்சியாளராகவும், இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராகவும் 216 முதல் 2019 வரை செயலாற்றி இருந்தார்.

இளைஞர்களுக்கு சிறப்பான வகையில் பயிற்சி அளித்து சீனியர் அணிக்கு அவர்களை தயார்படுத்தினார். சீனியர் அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் ஜூனியர் அணியில் இருந்து வீரர்களை அனுப்பி வைத்தார். இவரது கட்டமைப்பில் ஏராளமான இளைஞர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டனர்.

இதனால்தான் ஆஸ்திரேலியா தொடரில் விராட் கோலி, பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜடேஜா, அஷ்வின் இல்லாமல் இந்திய அணியால் வெற்றி பெற முடிந்தது.

முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன், ஷர்துல் தாகூர், ரிஷப் பண்ட், ஷுப்மான் கில் சிறப்பாக செயல்பட்டனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் சிறப்பாக செயல்பட்டுக்கு ராகுல் டிராவிட் முக்கிய காரணம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், சிறந்த பேட்ஸ்மேனுமான இன்சமாம் உல் ஹக் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வெல்வது எல்லோருக்கும் கடினமானது. இளைஞர்களை கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடரை கைப்பற்றியதுபோல், எந்த அணியையும் எனது வாழ்க்கையில் நான் பார்த்தது இல்லை. ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் 2016 உலகக்கோப்பை போட்டியில் எவ்வாறு செயல்பட்டனரோ, அதை தற்போதும் செய்ததை நான் நினைத்து பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

அப்புறம் ஷுப்மான் கில், பிரித்வி ஷா 2018 U-19 உலகக்கோப்பையில் விளையாடினார்கள். முகமது சிராஜ், நவ்தீப் சைனி, ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால் போன்றோர் இந்திய ஏ அணிக்காக அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

இந்த பயணம் U-19 அணியில் இருந்து இந்தியா ஏ, அதன்பின் இந்தியா ஏ அணியில் இருந்து தேசிய அணி. ராகுல் டிராவிட்டை தவிர வேறு எவராலும் இளம் வீரர்கள் தங்கள் தளத்தை மேம்படுத்தவில்லை என்பதை நான் உணர்ந்தேன்.

ராகுல் டிராவிட்டின் வலிமை. அவரை ஏன் தடுப்புச்சுவர் என்று அழைக்கிறர்கள் என்றால், அவர் வலிமையான பாதுகாப்பு ஆட்டக்காரர். அவரால் எந்தவித கண்டிசனிலும் விளையாடுவார். மனதளில் வலிமை கொண்டவர். எந்தவொரு இடத்திற்கும் ஏற்ப அவரி சரி செய்து கொள்வார். இந்த வீரர்களுடன் ராகுல் டிராவிட் பணிபுரிந்தது, அவர்களை மனதளவில் வலிமைப்படுத்தியுள்ளது.

முதல் போட்டி தோல்வி, விராட் கோலி இந்திய திரும்பிய பிறகு, மெல்போர்ன் டெஸ்ட் பேட்டியில் வெற்றி, நான்கு முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இடம் பெறாமல் போட்டியை தீர்மானிக்கும் போட்டியில் அசத்தியிருந்தால், இது எல்லாமே ராகுல் டிராவிட் செயலாகும் என நினைக்கிறேன்.

தொழில்நுட்பத்தை விட, எந்தவொரு கண்டிசனிலும் விளையாடும் வகையில் தடுப்பு மிகவும் சிறந்தது என்ற வகையில் அவர்களை தயார் செய்ய முயற்சி செய்துள்ளார். ராகுல் டிராவிட் அவர்களுக்கு பயிற்சி கொடுத்ததன் மூலம், அவர்கள் அதில் இருந்து பயனடைந்துள்ளனர்’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools