ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் – 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, ராஜஸ்தானில் நவம்பர் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது. அதன்படி, ராஜஸ்தான் தேர்தலுக்கு முதல் கட்டமாக 41 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பா.ஜ.க. அறிவித்துள்ளது. இதில் 7 எம்.பி.க்கள் பெயரும் இடம்பெற்றது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 89 பேர் அடங்கிய 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. அதில் முன்னாள் முதல் மந்திரி வசுந்தர ராஜே ஜலர்பதான் தொகுதியிலும், சதீஷ் புனியா ஆம்பர் தொகுதியிலும், ராஜேந்திர ரதோட் தாராநகர் தொகுதியிலும், ஜோதி மிர்தா நகவ்ர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news