ராமர் கோவில் விவகாரம் – காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எம்.எல்.ஏ

உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜூனா கார்கே ஆகியோர் அழைப்பை நிராகரித்ததாக அறிவித்தனர்.

இதற்கிடையே, ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பலர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரசின் அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்து குஜராத் மாநிலம் மகேஷானா மாவட்டம் விஜாப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சவுடா தனது பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் சங்கர் சவுத்ரியிடம் அவர் ராஜினாமா கடிதம் வழங்கினார்.

ராமர் கோவில் விவகாரத்தில் தனது கட்சியின் அணுகுமுறை பிடிக்கவில்லை எனக்கூறிய அவர், விரைவில் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news