ரிலீஸுக்கு தயாரான விஜய் சேதுபதியின் ‘இடம் பொருள் ஏவல்’!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி, விஷ்ணு மற்றும் நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்த ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த உடனேயே படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயாரித்து இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த செய்தி விஜய் சேதுபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools