X

ரூ.11 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்படும் – பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு பெருந்திட்ட வளாகம் அமைக்க 550 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித்துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4315 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.1360 கோடி, சென்னையில் வெள்ள பாதிப்பை குறைக்க ரூ.100 கோடி, தமிழக காவல்துறைக்கு ரூ.8876 கோடி, தீயணைப்பு துறைக்கு ரூ.405 கோடி, சிறைச்சாலைகளுக்கு ரூ.392 கோடி, சாலை பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.1403 கோடி, நீர் நிர்வாகத்திற்காக ரூ.1403 கோடி, கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.75 கோடி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் துறைக்கு 11,894 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து மானியங்களுக்காக ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிர்க்கடன் ரூ.11 ஆயிரம் கோடி வழங்கப்படும். 1364 நீர்ப்பாசன பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்ப்பாசன திட்டங்களுக்காக 6991 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags: south news