லண்டனில் புதிய வீடு? – நடிகை குஷ்பு விளக்கம்

நடிகை குஷ்பு டுவிட்டர் பக்கத்தில் லண்டனில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அங்குள்ள ஒரு வணிக வளாகத்துக்கு சென்ற புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது லண்டனில் உள்ள புதிய வீட்டில் முதல் தேநீர் அருந்துகிறேன் என்ற பதிவுடன் தேநீர் கிளாஸ் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இதை பார்த்த பலர் வலைத்தளத்தில் லண்டனில் குஷ்பு சொந்தமாக வீடு வாங்கி விட்டார் என்று வாழ்த்தி வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டனர். இன்னும் சிலர் குஷ்புவை விமர்சித்து கருத்துகள் பதிவிட்டார்கள். இது வலைத்தளத்தில் பரபரப்பானது.
இதனால் கோபமான குஷ்பு வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் புதிய வீடு என்றுதான் சொன்னேன். அதை சொந்தமாக வாங்கினேன் என்று அர்த்தம் இல்லை. அது வாடகை வீடா என்று கேட்க கூடாதா. சில தீயவர்கள் மோசமான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் கேலி செய்பவர்களை கண்டுகொள்ள வேண்டாம். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools