வங்களாதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 330 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. லிட்டன் தாஸ் சதமடித்து 114 ரன்னில் வெளியேறினார்.

அதன்பின் ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் அபித் அலி 133 ரன்கள் எடுத்தார்.

வங்காளதேசம் சார்பில் தைஜூல் இஸ்லாம் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதனால், 44 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்த வங்காளதேசம் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லிட்டன் தாஸ் அரை சதமடித்து 59 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 5 விக்கெட்டும், சஜித் கான் 3 விக்கெட்டும், ஹசன் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் மீண்டும் பொறுப்புடன் ஆடினர். அபித் அலி 91 ரன்களிலும் , அப்துல்லா ஷபிக்  73 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய அசார் அலி மற்றும் பாபர் அசாம் பாகிஸ்தான் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் அடித்து  8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அசார் அலி 24 ரன்களும் பாபர் அசாம் 13  ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools