X

வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வடக்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று முன் தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. இது ஒடிசா மாநிலம் பாலசூருக்கு அருகே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்க கூடும் என்று வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.