வஞ்சிக்கும் பாஜகவை வீழ்த்துவோம்! இந்தியாவை மீட்டெடுப்போம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆடியோ தொகுப்பு வெளியீடு

“Speaking for இந்தியா” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் ஆடியோ சீரிஸ் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆடியோ பதிவு http://speaking4india.com என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆடியோ பதிவில் பேசி உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

மாநிலங்களை அழிக்கும் நோக்கில் பா.ஜ.க செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் ஆட்சியாக மத்திய பாஜக ஆட்சி அமைந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.

இந்தியாவுக்காக எல்லோரும் பேச வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது. 2014-ல் மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. இதுவரை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

குஜராத் மாடல் என பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. தமிழ்நாட்டுக்கு எந்த திட்டங்களையும் மத்திய அரசு கொண்டுவரவில்லை. வஞ்சிக்கும் பாஜகவை வீழ்த்துவோம்! இந்தியாவை மீட்டெடுப்போம்!

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news