வாகனுக்கு பதிலடி கொடுத்த வாசிம் ஜாபர்

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. மேலும், 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3-0 என்னும் கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பின்னடைவை சந்திக்கும் போதெல்லாம் கடுமையாக விமர்சிக்கும் போக்கை கடைபிடித்து வந்தவர் வாகன்.

கடந்த 2019-ல் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது. இன்றைய காலகட்டத்தில் ஒரு அணி 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டாவதை நம்ப முடியவில்லை என அப்போது வாகன் டுவிட் செய்திருந்தார்.

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாபர், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனின்பழைய டுவிட் ஒன்றை சுட்டிக்காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது இங்கிலாந்து அணி 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வாசிம் ஜாபர் டுவிட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ஜாபரின் இந்த டுவிட் சுமார் 83 ஆயிரம் லைக்குகளை கடந்து வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools