வான்வழி தாக்குதல் சைரன் சத்தத்தை ஊடகங்கள் பயன்படுத்த தடை!

இந்தியா-பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. நேற்றிரவு பாகிஸ்தான் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி இந்தியாவின் தலைநகரான டெல்லியை தாக்க முயற்சி செய்துள்ளது.

இந்திய ராணுவம் இந்த முயற்சியை முறியடித்ததுடன், பாகிஸ்தானை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் 6 விமான தளங்களை தாக்கியதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வான்வழித் தாக்குதலின் போது எல்லையோர மாவட்டங்களில் பொதுமக்களின் எச்சரிக்கைக்காக ஒலிக்கப்படும் சைரன் சத்தத்தை பயன்படுத்துவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) அறிவுறுத்தியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools