விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் வேலைகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில பிரச்சினைகளால் தள்ளிப்போனது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளதாகவும் அதற்காக விக்ரம் 15 நாள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில், ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் பணிகளை முடித்து இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் விக்ரம் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools