விக்ரமின் 61வது படம் பூஜையுடன் தொடங்கியது

விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் தயாராகி உள்ளது. இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதையடுத்து, பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது.

‘சியான் 61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் இயக்குனர் பா.இரஞ்சித், நடிகர் விக்ரம், ஜி.வி. பிரகாஷ், கலையரசன், சிவகுமார், நடன இயக்குனர் சாண்டி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools