விஜயகாந்த் விரைவில் முழுநலம் பெற வேண்டும் – மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

‘தே.மு.தி.க. தலைவரும் அருமை நண்பருமான விஜயகாந்த் அவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை அறிந்தேன். அவர் விரைவில் முழுநலம் பெற வேண்டும் என்ற எனது பெருவிருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் எனவும் விழைகிறேன்!’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools