விஜய் சேதுபதியை அதிகமாக சைட் அடித்தேன்! – காயத்ரி

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ரம்மி என்று படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பெயர் எடுத்தவர் நடிகை காயத்ரி. இவர் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் படம் வரும் வாரம் வெளியாகிறது.

இப்படம் குறித்து காயத்ரி அளித்த சமீபத்திய பேட்டியில், “நாங்கள் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இருக்கிறோம். அதில் விஜய்சேதுபதி, தியாகராஜன் குமாரராஜா, 96 பிரேம் ஆகியோரும் இருக்கிறார்கள். நாங்கள் நேரம் கிடைக்கும்போது சந்தித்து பேசுவோம். அப்படித்தான் தியாகராஜன் எனக்கு தெரியும். அவர் ரொம்ப அமைதியாக இருப்பார். எதையும் அனுசரித்து செல்பவர். இதுதான் வேண்டும் என்று அடம் பிடிக்க மாட்டார். ஆனால் படப்பிடிப்பில் இதற்கு நேர்மாறாக இருந்தார். சின்ன சின்ன வி‌ஷயங்களில்கூட தான் நினைத்ததை கொண்டு வர சிரமப்படுவார்.

நான் இந்த படத்தில் நடிக்க தொடங்கும்போது பிற நடிகர்களை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை இயக்குனர் எடுத்து இருந்தார். அதில் நடித்த ஒரு நடிகர் என்னிடம் 25வது டேக்கில் தான் இயக்குனர் ஓகே செய்ததாக சொன்னார். எனக்கு பயமாகி விட்டது. எப்போதுமே என்னுடைய முதல் டேக் தான் சிறப்பானதாக இருக்கும். ஆனால் பயந்ததுபோல் அதிக டேக்குகள் வாங்கவில்லை.

சூப்பர் டீலக்ஸ் டிரெய்லரில் விஜய் சேதுபதியை பார்த்ததும் உங்களை பார்த்து பொறாமையாக இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்துகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் என் நடிப்பை புகழ்ந்து பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது. அவர் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதே எனக்கு பெரிய பொறுப்பை கொடுத்துள்ளது. ஷில்பா கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. விஜய் சேதுபதியை ஆண் தோற்றத்தில்கூட அந்த அளவுக்கு சைட் அடித்ததில்லை. ஷில்பாவை பயங்கரமாக சைட் அடித்தேன். டிரெய்லர் பார்த்தபோதுதான் அவரது உழைப்பு புரிந்தது.” என்று தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools