X

விஜய் சேதுபதி நடிக்கும் சிந்துபாத்!

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் விஜய் சேதுபதியின் 26-வது படத்தை இயக்கி வருகிறார்.

கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. அதன்படி படத்திற்கு `சிந்துபாத்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அருண்குமார் – விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.