விஜய் மக்கள் இயக்கம் செய்த உதவி – பாராட்டும் மக்கள்

சென்னையை அடுத்துள்ள பனையூரில் சில தினங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களும், ரத்த தானத்திற்காக ‘தளபதி விஜய் குருதியகம்’ என்ற பெயரில் செயலியும் தொடங்கப்பட்டது. ரசிகர்களின் இந்த செயல் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் செங்கல்பட்டு [மேற்கு] மாவட்ட செம்பாக்கம் நகர மக்கள் இயக்கம் சார்பில் 25-வது வாரமாக ஏழை எளிய குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ரொட்டி, பால், முட்டை, வாழைப்பழம், பிஸ்கட் மற்றும் நோட்டு புத்தகம் வழங்கி வருகின்றனர். ரசிகர்களின் இந்த செயலால் அனைவரும் அவர்களை பாராட்டி வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools