விஜே பப்பு நாயகனாக நடிக்கும் மிஸ்டரி திரில்லர் இணையத் தொடர் ‘ராகவன் : Instinct’ பூஜையுடன் தொடங்கியது

’வேற மாரி ஆபிஸ்’, ‘வேற மாறி லைவ் ஸ்டோரி’ தொடர்கள் மற்றும் ‘மால்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த விஜே பப்பு, ‘ராகவன்  : Instinct’ என்ற இணையத் தொடர் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.

ஜில் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மிதுன் வேம்பலக்கல் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் ஏ.ஜி.ஆர் இயக்குகிறார். விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

விஜெ பப்பு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் படத்தின் தயாரிப்பாளர் மிதுன் வேம்பலக்கல் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இவர்களுடன் சுகன்யா, சங்கர பாண்டி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இத்தொடரின் துவக்க விழா பூஜையுடன் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது. இதில், திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டு ‘ராகவன் : Instinct’ இணையத் தொடர் குழுவினரை வாழ்த்தினார்கள்.

8 எப்பிசோட்களாக உருவாகும் இத்தொடர் 1980-ம் காலக்கட்டத்தில் நடக்கும் மிஸ்டரி திரில்லர் வகை கதையாகும். கதாநாயகனின் உள்ளுணர்வு அவரை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இத்தொடர் அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும் விதத்தில் இருக்கும், என்று இயக்குநர் ஏ.ஜி.ஆர் தெரிவித்தார்.

தொடரின் தலைப்பு குறித்து கூறிய இயக்குநர் ஏ.ஜி.ஆர், ”படத்தின் மையக்கரு நாயகனின் உள்ளுணர்வு தான். அவர் ஒன்றை தேடிச் செல்லும் போது, அவருக்குள் சொல்லும் உள்ளுணர்வு அடுத்தக்கட்டத்திற்கு அவரை அழைத்துச் செல்லும். அதற்கு ஏற்ற தலைப்பாக இருக்க வேண்டும், அதே சமயம் ரசிகர்களை ஈர்க்க கூடிய தலைப்பாக இருக்க வேண்டும் என்று யோசித்த போது தான், உலக நாயகன் நடித்த ராகவன் கதாபாத்திரம் நினைவுக்கு வந்தது. அதனால் தான் ‘ராகவன் : Instinct’ என்று வைத்தோம்.” என்றார்.

தயாரிப்பாளர் மிதுன் கூறுகையில், “இயக்குநர் ஏஜிஆர் கூறிய கதை மிகவும் பிடித்தது. திரைப்படம் எடுக்கும் யோசனையில் இருந்தோம், ஆனால் அவரது கதை எங்களை கவர்ந்துவிட்டதால் வெப் சீரிஸ் எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். இதை தயாரிப்பதோடு முக்கிய வேடம் ஒன்றிலும் நடிக்கிறேன், உங்களுடைய ஆதரவு வேண்டும்.” எண்றார்.

நாயகன் விஜே பப்பு கூறுகையில், “இயக்குநர் ஏஜிஆர் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன். மிஸ்டரி திரில்லர் ஜானர் கதை என்பதால் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்போது தான் தொடங்கியிருக்கிறோம், விரைவில் மற்ற விபரங்களை அறிவிப்போம்.” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools