X

விம்பிள்டன் டென்னிஸ் – காலியிறுதிக்கு நுழைந்த பெடரர்

கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் லண்டனில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)- பெர்ரே டினி (இத்தாலி) ஆகியோர் பலபரிட்சை நடத்தினார்கள். இதில் பெடரர் 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி 6-3, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கஜகஸ்தான் வீரர் குகுஷேகினை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடக்கும் கால் இறுதி ஆட்டங்களில் ஜோகோவிச் (செர்பியா)- கோபின் (பெல்ஜியம்), பெடரர்- நிஷிகோரி, பெல்லா (அர்ஜென்டினா)- பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்), நடால் (ஸ்பெயின்)- ஷாம்குயர்ரி (அமெரிக்கா) ஆகியோர் மோதுகிறார்கள்.

பெண்கள் பிரிவில் கால் இறுதிக்கு செரினா வில்லியம்ஸ் (அமெரிக்கா), சிமோனா ஹாலெப் (ருமேனியா), அலிசன் ரிஸ்கி (அமெரிக்கா), கரோலினா முசோவா (செக் குடியரசு), கோன்டா (இங்கிலாந்து), ஸ்விட்டோலினா (உக்ரைன்), ஸ்டிரிகோவா (செக் குடிய ரசு), ஷாய் ஷாங் (சீனா) ஆகியோர் தகுதி பெற்றனர்.

Tags: sports news