X

விம்பிள்டன் டென்னிஸ் – ஜோகோவிச், சின்னர் காலியிறுதிக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நெதர்லாந்தின் ரிஜ்தோவெனுடன் மோதினார். இதில் 6-2, 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஜோகோவிச் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு சுற்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார். இதில் 6-1, 6-4, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் சின்னர். நாளை நடைபெறும் காலிறுதியில் ஜோகோவிச், சின்னரை எதிர்கொள்கிறார்.