விராட் கோலிக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு!

இந்திய அணி கேப்டன் விராட் கோலி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஓய்வு இல்லாமல் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியா தொடர், ஐபிஎல், உலகக்கோப்பை, வெஸ்ட் இண்டீஸ், தற்போது நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்கா தொடர் என ஓய்வில்லாமல் விளையாடி வருகிறார்.

இதனால் வேலைப்பளுவை காரணம் காட்டி வங்காளதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விராட் கோலி விளையாடமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்காளதேச தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு வருகின்ற 24-ந்தேதி நடக்கிறது. அப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news