விவசாயிகளின் போராட்டத்தில் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்த போலீஸ்

புது டெல்லியை நோக்கி “டெல்லி சலோ” (Delhi Chalo) எனும் முழக்கத்துடன் குறைந்த ஆதார விலை (Minimum Support Price) உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வந்த விவசாயிகள் பேரணியை நடத்தி, பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி சென்றனர்.

நேற்று மத்திய அமைச்சர்கள் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், அவர்கள் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையில் டெல்லியின் அனைத்து எல்லைப்பகுதிகளிலும் காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகளின் போராட்டத்தை கலைக்கும் வகையில் காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் பல போராட்டக்காரர்கள் அங்குமிங்கும் ஓடினர். ஆனால், இதனை பொருட்படுத்தாமல் பேரணியாக உள்ளே நுழைய விவசாயிகள் முயன்று வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளால் டெல்லியை சுற்றி தற்போதைய நிலைமை பதட்டமாக இருந்து வருகிறது.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools
Tags: tamil news