விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.

மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது. மார்க் ஆண்டனி படத்தின் இரண்டாவது பாடல், “ஐ லவ் யு டி” வெளியிடப்பட்டது. இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema