வி.பி.சிங்கின் கனவை நனவாக்க வேண்டும் – டாக்டர்.ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்தி, இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்கிய தலைவர் வி.பி.சிங் அவர்களுக்கு இன்று 15-ஆம் நினைவு நாள்.

சாதிவாரி கணக்கெடுப்பு, சமூகநீதி விரிவாக்கம் ஆகியவை வி.பி.சிங் அவர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்கி, அனைத்து சாதிகளுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற சமூகநீதி இலக்கை எட்டி, பாதுகாக்க வி.பி.சிங் அவர்களின் நினைவு நாளில் உறுதியேற்போம்!

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news