வீட்டில் இருந்து நடந்த சென்று வாக்களித்த நடிகர் விக்ரம்

சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகுமார், கார்த்தி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் வாக்குகளை செலுத்தி வருகிறார்கள்.

இதில் நடிகர் அஜித், பொது மக்களோடு வரிசையில் நின்று வாக்கை செலுத்தினார். நடிகர் விஜய், சைக்கிளில் வந்து ஓட்டு போட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில், நடிகர் விக்ரம் தன்னுடைய வீட்டில் இருந்து, வாக்குச்சாவடிக்கு நடந்தே வந்து தனது வாக்கை பதிவு செய்திருக்கிறார்.

இவர் நடந்து வந்து ஓட்டு போடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools