வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்

வெப் தொடரில் நடிக்க சமீபகால கதாநாயகிகள் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம், சினிமாவை விட வெப் தொடர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள்.

வெப் தொடர்களுக்கு தணிக்கை கிடையாது. படுகவர்ச்சியான வசனங்களும், ஆபாசமான காட்சிகளும் வெப் தொடர்களில் அனுமதிக்கப்படுகின்றன. படுக்கை அறை காட்சிகள் தாராளமாக இடம்பெறுகின்றன. இதற்காகவே அதில் நடிக்கும் நடிகர்-நடிகைகளுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள்.

அதிக சம்பளம் என்ற வசிய வலையில் சிக்கி, படுகவர்ச்சியாக நடித்துள்ள கதாநாயகிகள் வருமாறு:-

1. சமந்தா. இவர், ‘பேமிலி 2’ என்ற வெப் தொடரில் படுகவர்ச்சியாக நடித்து இருக்கிறார்.

2. ரெஜினா கசன்ட்ரா. பெண்ணும் பெண்ணும் உறவு கொள்கிற ‘லெஸ்பியன்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

3. அமலாபால். தன்னை விட பல வயது மூத்த ஒரு ஆணுடன் உறவு வைத்துக் கொள்கிற பெண்ணாக, ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். (அமலாபால், ஏற்கனவே மாமனாருடன் உறவு கொள்ளும் மருமகளாக ‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்து இருந்தார்.)

இந்த மூன்று பேரும் வெப் தொடர்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools