வெள்ளை அறிக்கைக்கு போட்டியாக கருப்பு அறிக்கை வெளியிட இருக்கும் காங்கிரஸ்?

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அப்போது காங்கிரஸ் தலைமையிலான 2014-க்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன் தற்போது மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். அதன்மீது விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இந்த நிலையில் காங்கிரஸ் கருப்பு அறிக்கை கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுளு்ளது. மோடியின் 10 ஆண்டு அரசு தொடர்பாக கருப்பு அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கொண்டு வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் சனிக்கிழமை (பிப்ரவரி 10-ந்தேதி) பாராளுமன்ற இரு அவைகளிலும் காரசார விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news