வேலூர் தொகுதியில் நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள பிரசார சுற்றுப்பயணத்தின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூர் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து 2 கட்டங்களாக பிரசாரம் செய்கிறார்.

முதல்கட்டமாக, நாளை தொடங்கி 28, 29 ஆகிய மூன்று நாட்கள் பிரசாரம் செய்கிறார். இரண்டாம் கட்டமாக, ஆகஸ்ட் மாதம் 1,2,3 ஆகிய மூன்று நாட்களிலும் அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news