வைரலாகும் ‘ஜப்பான்’ பட டிரைலர்

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இந்த டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து யூ டியூபில் மூன்று மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோவை பகிர்ந்து அறிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools