வைரலாகும் நடிகர் சூர்யின் ஒயிலாட்டம் வீடியோ

கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சூரி, அகரம் அறக்கட்டளை குறித்து பேசினார். அப்போது ஆயிரம் கோவில் கட்டுவதைவிட, அன்னசத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என பேசினார். அதற்கு சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இதையடுத்து, விருமன் படத்தின் சென்னை செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூரி, “நான் எப்போதும் மீனாட்சி அம்மனை குறிப்பிட்டுதான் பேசுவேன். எனக்கு மீனாட்சி அம்மன் மிகவும் பிடிக்கும். நான் நடத்தும் ஹோட்டல்களுக்கு அம்மன் எனதான் பெயர் வைத்துள்ளேன். என்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது நான் படிக்காதவன், அதன் முக்கியத்துவம் எனக்கு தெரியும் என அவர் பேசினார். தற்போது நடிகர் சூரியின் ஒயிலாட்டம் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதில், சூரி கோவில் திருவிழா ஒன்றில் பெரியவர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடுகிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools