வைரலாகும் யோகி பாபுவின் ‘பன்னிகுட்டி’ படத்தின் பாடல் புரோமோ

தமிழ் திரையுலகில் காமெடியனாக களம் இறங்கி கதாநாயகனாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் யோகிபாபு. இவர் தற்போது விஜய்யுடன் இணைந்து பீஸ்ட், அஜீத்துடன் இணைந்து வலிமை, சிவகார்த்திகேயனுடன்  அயலான், விஜய் சேதுபதியுடன் கடைசி விவசாயி, விஷாலுடன் வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் முன்னணி காமெடியனாக நடித்து வருகிறார்.

இதனிடையே யோகிபாபு கதாநாயகனாக நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் பன்னிக்குட்டி. கிருமி பட இயக்குனர் அனுசரண் முருகையன் இயக்கத்தில் யோகிபாபு மற்றும் கருணாகரன் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் திண்டுக்கல்.ஐ.லியோனி, சிங்கம் புலி, ராமர், டைகர் கார்டன் தங்கதுரை ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 11:11 புரோடக்சன்ஸ் வழங்கும்  பன்னிகுட்டி திரைப்படத்திற்கு கிருஷ்ணகுமார் இசையமைக்க, சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்நிலையில் பன்னிக்குட்டி திரைப்படத்தின் பாடல் புரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த புரோமொ வீடியோவை அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools