வைரலாகும் விஷ்ணு விஷாலின் ‘மோகன் தாஸ்’ டீசர்

 

விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. ஆக்‌ஷன் கலந்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் ‘மோகன் தாஸ்’ என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.

முரளி கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மோகன்தாஸ்’ படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும், இந்திரஜித் சுகுமாரன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மோகன் தாஸ் படத்தின் டீசர் மார்ச் 15 வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools