ஸ்பைடர் மேன் உடையில் ரீல்ஸ் – பைக்கில் சாகசம் செய்த ஜோடி கைது

டெல்லியில் துவாரகா பகுதியில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட, சூப்பர் ஹீரோக்களான ஸ்பைடர் மேன் மற்றும் ஸ்பைடர் வுமன் உடை அணிந்து பைக்கில் சாகசம் செய்த ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஹெல்மெட் அணியாமல் நடுரோட்டில் இருவரும் சாகசம் செய்துள்ளனர். பிறகு, கண்ணாடி மற்றும் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் பயணம் செய்து போக்குவரத்து விதிகளை மீறியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools