10 இஸ்ரேலியர்கள், 4 தாய்லாந்து நாட்டினர் விடுவிப்பு – இஸ்ரேல் ராணுவம் தகவல்

ஹமாஸ்- இஸ்ரேல் இடையே கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்களை ஹமாஸ் விடுவித்து வந்தது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்படுள்ள பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

நான்கு நாள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு மேலும் இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. அந்த வகையில் நேற்றிரவு கடைசி கட்டமாக 10 இஸ்ரேலியர்கள், நான்கு தாய்லாந்து நாட்டினரை ஹமாஸ் விடுவித்துள்ளது. காசா முனையில் இருந்து எகிப்து ராபா எல்லையில் அவர்கள் விடப்பட்டுள்ளனர்.

மருத்துவ பரிசோதனைக்குப்பின் குடும்பத்தினருடன் சேர்க்கப்படுவார்கள் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடைசி கட்டமாக பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள். இன்று காலை 10.30 மணியுடன் ஆறு நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வருகிறது. அதன்பின் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை. இருந்தபோதிலும் அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சி மேற்கொள்ளும்.

10 மாத குழந்தை மற்றும் அந்த குழந்தையின் குடும்பத்தினரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அவர்கள் காசா மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் இஸ்ரேல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools