10,12 வகுப்புகளுக்கான மதிப்பெண் சதவீதம் மற்றும் தரவரிசை விரங்களை நிறுத்த சி.பி.எஸ்.இ முடிவு

மாணவா்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மையைத் தவிா்க்கும் வகையில், தோ்வில் முதலிடம் பிடித்த மாணவா் என்பது போன்ற தனிப்பட்ட மாணவா்களின் பட்டியலை வெளியிடுவதை சி.பி.எஸ்.இ. ஏற்கெனவே நிறுத்திவிட்டது. அதன் தொடா்ச்சியாக, தற்போது ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை போன்ற விவரங்கள் வெளியீட்டையும் நிறுத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறியதாவது:-

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பொதுத் தோ்வு முடிவில் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும். மாணவா் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண் விவரம், ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை, அனைத்துப் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்கள் பட்டியல் போன்ற விவரங்கள் வெளியிடப்படாது.

எனவே, உயா் கல்வி நிறுவனங்கள் அல்லது வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் சி.பி.எஸ்.இ. மாணவா்களின் பாட மதிப்பெண்களின் அடிப்படையில், அவா்கள் பெற்ற மொத்த மதிப்பெண்ணையும், மதிப்பெண் சதவீதத்தையும் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்’ என்றாா்.

சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வரும் 2024, பிப்ரவரி 15-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news