12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு

அரசு வழங்கிய மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள், தனித்தேர்வர்களாக விண்ணப்பித்து தேர்வு எழுத முடியாதவர்களுக்கு துணைத்தேர்வு வருகிற 6-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் (நுழைவுச்சீட்டு) இன்று காலை வெளியிடப்பட்டது.  ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

துணைத்தேர்வில் பெறும் மதிப்பெண்களே +2 தேர்வின் இறுதியான மதிப்பெண்களாகும்.

விண்ணப்ப எண் இல்லாத காரணத்தினால் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தங்களுடைய ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools