X

தமிழக காவல்துறையில் ஒரே நாளில் 14 டி.எஸ்.பி-க்கள் இடம் மாற்றம்!

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு காவல்துறையை இறுக்கிப் பிடித்து வருகிறது! சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் முதல்வர் தொடர்ந்து 3 நாட்கள் உயர் அதிகாரிகளுடன் கிடுக்கிப்பிடி ஆலோசனை நடத்திய நிலையில், கடந்த 12.11.2026 அன்று ஒரே நாளில் 14 DSP-களை அதிரடியாக இடம் மாற்றம் செய்து உத்தரவு போட்டிருக்கிறது உள்துறை.

இதில் ஹைலைட் என்னன்னா, பெரும்பாலும் தென் மாவட்டங்களில் இருந்த DSP-க்கள் தான் மாற்றப்பட்டிருக்கிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த R. பாலசுந்தரம் தஞ்சாவூர் SJ&HR பிரிவுக்கும், தேவகோட்டையில் இருந்த C.கண்ணன் சென்னை பெருநகர காவல் CRB பிரிவுக்கும், திண்டுக்கல் டவுனில் இருந்த N.கார்த்திக் மாநில தலைமையக SD CID-க்கும், தக்கலையில் இருந்த G.பதிபன் லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல அம்பாசமுத்திரம் SD-யில் இருந்த K. கணேஷ்குமார் ராமநாதபுரம் உளவுத்துறைக்கு (SB CID) அனுப்பப்பட்டு, அவர் இடத்திற்கு அரியலூரில் இருந்து P. சண்முகம் அம்பாசமுத்திரம் புது DSP-யாக போடப்பட்டுள்ளார்! திருச்செந்தூர் SD-யில் இருந்த M. மகேஷ்குமார் உளவுத்துறை Core Cell-க்கும், சிவகங்கையில் இருந்த R. புருஷோத்தமன் ஆவடி கமிஷனரேட் CRB-க்கும், A. அமலா ஆட்வின் மதுரை உளவுத்துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் உசிலம்பட்டியில் இருந்த G.S. ஜெய்கணேசன் சிவகங்கை Sub-Division-க்கும், அவருக்கு பதிலாக விழுப்புரம் பயிற்சி பிரிவில் இருந்த B. சதீஷ்குமார் உசிலம்பட்டிக்கும், கள்ளக்குறிச்சி DCRB-யில் இருந்த K. சரவணகுமரன் சிவகங்கை SJ&HR பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்! திண்டுக்கல்லில் இருந்த A. செந்தில் எழந்திராயன் மதுரை மாநகர CCB-II பிரிவுக்கும் போடப்பட்டுள்ளார்.

மொத்தத்தில் இது வெறும் இடமாற்றம் இல்ல! கவர்னர் டெல்லியில் அமித்ஷாவை்சந்தித்த பிறகு, சட்டம் ஒழுங்கை கையில் எடுத்து, உளவுத்துறை, லஞ்ச ஒழிப்பு, மத்திய குற்றப்பிரிவு என அனைத்தையும் வலுப்படுத்த முதல்வர் விஜய் போட்ட முதல் மாஸ்டர் பிளான் தான் இந்த 14 DSP-களின் அதிரடி மாற்றம்.