X

14,000 ஊழியர்கள் பணி நீக்கம்? – அமேசான் நிறுவனம் மறுப்பு

அமேசான் நிறுவனம் வரும் மே 2026-இல் சுமார் 14,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன, இருப்பினும் இதனை ஒரு வதந்தி என அந்நிறுவனம் மறுத்துள்ளது.

ஏற்கனவே 2026 ஜனவரியில் சுமார் 16,000 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தச் செய்தி அதன் கார்ப்பரேட் ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக நடுத்தர மேலாண்மைப் பொறுப்புகளில் உள்ள வெள்ளை காலர் பணியாளர்கள் மற்றும் AWS, ரீடைல் போன்ற பிரிவுகளில் இந்தப் பாதிப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் நிறுவனக் கட்டமைப்பைச் சீரமைக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதினாலும், அமேசான் தரப்பில் இந்தச் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags: Amazon