15-ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பு
நாடுமுழுவதும் வரும் 15-ம்தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகின்றன. இதற்கிடையே பொழுதுபோக்கு பூங்காக்களை திறப்பதற்கான வழிகாட்டு முறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
* பொழுதுபோக்கு பூங்காவில் நீச்சல்குளம் செயல்பட தடை.
* பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள உணவு கூங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே உணவருந்த அனுமதிக்க வேண்டும்.
* பொழுதுபோக்கு பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
* கர்ப்பிணிகள், 65வயதிற்கு மேற்பட்டவர்கள், 10 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி தரக்கூடாது.
* பொழுதுபோக்கு பூங்காவில் அதிக அளவில் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது.
* பொழுதுபோக்கு பூங்காவிற்கான டிக்கெட்டை ஆன்லைனில் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.