சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 10, 11-ல் பராமரிப்பு பணி காரணமாக கடந்த 20-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரையில் 45 நாட்கள் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் புறநகர் ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்தை குறைக்க தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே இன்று முதல் கூடுதலாக 20 விரைவு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இந்த விரைவு மின்சார ரெயில்கள் எழும்பூர், மாம்பலம், கிண்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.