X

200 ரெயில் நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் – ரெயில்வே அமைச்சர் தகவல்

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி பராமரிப்பு தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

47 ரெயில் நிலையங்களுக்கான டெண்டர் விடும் பணிகள் முடிவடைந்த நிலையில், 32 ரெயில் நிலையங்களில் பணிகள் தொடங்கியுள்ளன. 200 ரெயில் நிலையங்களை சீரமைக்க அரசு பெரிய திட்டம் வகுத்துள்ளது. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வசதிகள், காத்திருப்பு ஓய்வறைகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் அந்த ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

எதிர்காலத்தில் இந்தியாவில் 400 வந்தே பாரத் ரெயில்கள் இருக்கும். அவற்றில் 100 ரெயில்கள் மராத்வாடாவின் லத்தூரில் உள்ள பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் நெடுஞ்சாலைகள் அல்லது ரெயில்வே மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன. மராத்வாடாவின் சில பகுதிகளும் இணைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.