2019 ஆம் ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லும்! – சோயிப் மாலிக் நம்பிக்கை

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான சோயிப் மாலிக் இடம்பிடித்து விளையாடி வருகிறார். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 2019 உலக்கோப்பையை வெல்லும் திறமை பாகிஸ்தானிடம் உள்ளது என்று சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சோயிப் மாலிக் கூறுகையில் “உலகக்கோப்பையை வென்று கையில் ஏந்தும் திறமை எங்களிடம் உள்ளது. ஆனால், திறமை மட்டும் இருந்தால் எதையும் வெல்ல முடியாது. சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும்.

உலகக் கோப்பையை வெல்லும் அளவிற்கான தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளோம். நினைவுகூரத்தக்க 2019 உலகக்கோப்பையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.” என்றார்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools