2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள்! – ஒப்புதல் அளிக்க பிசிசிஐ முடிவு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ)ஆண்டு பொதுக்கூட்டம் வருகிற வியாழக்கிழமை (24-ந்தேதி) கூடுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.

முக்கியமானதாக ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்பது குறித்த முடிவு எடுக்கப்பட இருக்கிறது. இந்த கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அடுத்த வருடம் 10 அணிகள் பங்கேற்காதாம். 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்று விளையாடுமாம்.

10 அணிகள் என்றால் 94 போட்டிகள் நடைபெற இருக்கும். அப்படி என்றால் சுமார் இரண்டரை மாத காலம் ஆகும். அவ்வளவு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வது கடினமானதாக இருக்கும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools