உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் சுற்று முடைவடைந்து தற்போது ரவுண்ட் ஆஃப் 32 சுற்று நடைபெற்று வருகிறது. இதில், இன்று அதிகாலை நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் நடந்த போட்டியில் ஸ்வீடன் – பிரான்ஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே கோல் கணக்கை தொடங்க இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டினர். எனினும் , முதல் பாதி முடியும் வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் முதல் பாதி முடிவுக்கு வரும் தருவாயில் பிரான்ஸ் அணியின் எம்பாப்பே கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து, ஆட்டத்தின் 53-ஆவது நிமிடத்தில் மைக்கேல் ஒலிஸ் அசிஸ்ட் செய்ய பிராட்லி பார்கோலா கோல் அடிக்க பிரான்ஸ் அணி 2-0 கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 74-ஆவது நிமிடத்தில் மைக்கல் ஒலிஸ் அசிஸ்ட்-ஐ எம்பாப்பே கோலாக மாற்றினார்.
இதனால் பிரான்ஸ் 3-0 என வலுவான நிலைக்கு முன்னேறியது. இதில் இரு கோல்களை எம்பாப்பே அடித்தார். இதைத் தொடர்ந்து ஸ்வீடனின் கோல் அடிக்கும் முயற்சிகள் கடைசி வரை அந்த அணிக்கு சாதகமாக மாறவில்லை. இதனால், ஆட்டத்தின் இறுதியில் பிரான்ஸ் 3-0 கணக்கில் வெற்றி பெற்றது.