உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் முதல் சுற்றின் முடிவில் 32 அணிகள் அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் வெற்றிபெறும் அணிகள் அடுத்த சுற்றான காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் நுழையும்.
இன்றைய ரவுண்ட் ஆப் 32 சுற்றில் நெதர்லாந்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் 0-0 என்ற நிலையில் இருந்தன. 2ஆம் பாதியின் 72வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் நெதர்லாந்து முன்னிலை பெற்றது.
பின்னர் ஆட்டத்தின் 90 நிமிடங்கள் முடிந்த பின்னர் கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இந்த கூடுதல் நேரத்தில், சரியாக ஆட்டத்தின் 91வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் இசா தியோப், அணியின் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தில் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஆனால் இதில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 1-1 என்ற சமநிலை தொடர்ந்த நிலையில், இதனால் ஆட்டம், பெனால்டி ஷூட் அவுட்க்கு சென்றது. பரபரப்பாக நடந்த பெனால்டி ஷூட் அவுட் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி மொராக்கோ அபார வெற்றிபெற்றது.
மொராக்கோவின் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் இஸ்மாயில் சைபாரி இறுதிப் பந்தை மிகத் துல்லியமாகக் கோலாக மாற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
இதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய, ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் மொராக்கோ நுழைந்தது. நெதர்லாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியது.