21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தி திரைப்படத்தில் நடிக்கும் ஜோதிகா

தென் இந்தியா படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஜோதிகா. இவர் இந்தியில் 1998-ம் ஆண்டு வெளியான ‘டோலி சஜா கே ரக்கீனா’ என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். அதன்பின் தமிழ் படங்களில் கவனம் செலுத்திய ஜோதிகா, 2001-ல் ‘லிட்டில் ஜான்’ என்ற இந்தி படத்தில் மீண்டும் நடித்து இருந்தார். அதன் பிறகு இந்தியில் அவர் படங்கள் எதுவும் நடிக்கவில்லை.

தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். இது ஸ்ரீகாந்த் பொல்லா என்ற தொழில் அதிபரின் வாழ்க்கை வரலாறு படம். இதில் தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்க, துஷார் இத்ராணி இயக்குகிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜோதிகாவை படக்குழுவினர் அணுக அவரும் சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட இடைவெளிக்கு ஜோதிகா மீண்டும் இந்தி படத்தில் நடிக்கயிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிகா தற்போது மலையாளத்தில் தயாராகும் காதல் படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools