22 ஆம் தேதி கோயம்பேடு மார்க்கெட் மூடப்படுகிறது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனது.

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலம் நோய் பரவுவதால் அனைத்து விமான பயணிகளையும் முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்து அனுப்புகின்றனர்.

மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். 22-ந்தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

பால், உணவு, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அறிவித்திருந்தார். ஆனாலும் 22-ந்தேதி அனைத்து கடைகளையும் அடைக்க வியாபார நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.

சென்னை மக்களுக்கு தேவையான காய்கறிகளை ‘சப்ளை’ செய்யும் கோயம்பேடு மார்க்கெட் ஞாயிற்றுக் கிழமை (22-ந்தேதி) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மார்க்கெட் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யப்படுகிறது. பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளித்து மார்க்கெட்டை சுத்தம் செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools