4 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம்

கேரளா, தெலுங்கானா, குஜராத், ஒடிசா உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆஷிஷ் ஜிதேந்திர தேசாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே நியமனம் செய்யப்பட்டுள்ளார். குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக சுனிதா அகர்வாலும், ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதியாக சுபாஷிஷ் தலபாத்ராவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நீதிபதி சாம் கோஷியை தெலுங்கானா நீதிமன்றத்துக்கு பணி மாறுதல் வழங்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news